தமிழ் நடிகர்களே, தமிழுணர்வு எங்கே?
சென்னை:
தமிழ் உள்ளிட்ட பிற மொழி சினிமாக்களுக்கு தடை விதிக்கும் கன்னடத் திரையுலகினரைக் கண்டித்து தெலுங்குநடிகர்கள் உடனடியாக போராட்டம் நடத்தியுள்ள நிலையில், தமிழ் நடிகர்கள் மட்டும் ஆழ்ந்த அமைதி காப்பதுஏன் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கே.ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் பிற மொழி படங்களை திரையிடக்கூடாது என்று கோரி கன்னட திரையுலகினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது தமிழ் உள்ளிட்ட பிற மொழி திரையுலகுக்கு எதிராக கோஷங்கள்போடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நியாயமற்றது என்பதை உணர்ந்த தெலுங்கு திரையுலகினர் உடனடியாகதங்களது மாநிலத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் உணர்வு மிக்கவர்கள்.
ஆனால் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் நிடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களுக்கு தமிழ்உணர்வே சுத்தமாக இல்லை, நன்றாக மரத்துப் போய் விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
தமிழால் பிழைக்கும் அவர்கள் தமிழுக்காக குரல் கொடுக்கக் கூட தோன்றாமல் அமைதி காப்பது ஏன்?
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன். இதை சில முன்னணி நடிகர்கள் (குறிப்பாகவிஜய்காந்த்) விரும்பவில்லை. ஆனால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப நான் செயல்பட முடியாது.
நடிகர் சங்கத்தில் வேண்டுமானால் அவர்கள் நாட்டாமை செய்யலாம். தயாரிப்பாளர் சங்கத்தில் தலையிடஅவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்று கேட்டார் ராஜன்.
தமிழ்த் திரையுலக பிரச்சனைகளை முன் வைத்து அடிக்கடி குரல் கொடுத்து வருபவர் ராஜன். காவிரிப்பிரச்சினையில் தமிழ்த் திரையுலகம் அதிரடி போராட்டத்தை அறிவித்தபோது பாரதிராஜாவுடன் உடனிருந்தவர்.தமிழர்களால் பிழைத்துவிட்டு தமிழர்களை ஏமாற்றும் கன்னட நடிகர்களை விரட்ட வேண்டும் என்று கூறிவருபவர்.
திருட்டு விசிடி பிரச்சனையையொட்டி காவி உடை அணிந்து போராட்டம் நடத்தியவர். சமீபத்தில் நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த்துக்கும் இவருக்கும் பெரும் மோதலும் நடந்தது. அப்போது ராஜனை, விஜயகாந்த் மதுரைபாணி கெட்ட வார்த்தையால் சரமாரியாக அபிஷேகம் செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந் நிலையில் தான், தமிழ் நடிகர்களுக்கு தமிழ் உணர்வில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜன்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications