மேலும் 2 பேரை அடையாளம் காட்டிய பத்மா
சென்னை & காஞ்சி:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரை, சங்கரராமனின் மனைவி பத்மாவும் மகள் உமாவும் இன்று சரியாகஅடையாளம் காட்டினார்.
கடந்த 22ம் தேதி சென்னை மத்திய சிறையில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் கொலையாளிகளான ரஜினி என்ற சின்னா மற்றும் கதிரவனைபத்மாவும், அவரது மகள் உமாவும் அடையாளம் காட்டினர்.
இன்று மீண்டும் நடத்தப்பட்ட அணிவகுப்பில் மாட்டு பாஸ்கர், அம்பி என்ற அம்பிகாபதி ஆகியோரை பத்மா முதல் சுற்றிலேயே சரியாகஅடையாளம் காட்டினார்.
20க்கும் மேற்பட்ட கைதிகளுடன் அவர்கள் கலந்து நிற்க வைக்கப்பட்டு இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்ராஜேந்திரன் முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பு வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
3 முறை மீண்டும் மீண்டும் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டபோதும், இந்த இருவரையும் பத்மா சரியாக அடையாளம் காட்டினார்.
மாட்டு பாஸ்கர், அம்பிகாபதி, கதிரவன், சின்னா இந்த நால்வரும் தான் சங்கரராமனின் வீட்டுக்குச் சென்று பத்மாவிடம், உங்கள் கணவர்எங்கே என்று கேட்டு விவரம் தெரிந்து கொண்டு கோவிலுக்குப் போய் அவரைக் கொலை செய்தவர்களாவர்.
இவர்களைத் தவிர மேலும் இருவரும் உடன் சென்றனர். ஆனால், அவர்கள் வெளியிலேயே நின்று கொண்டதால் பத்மா அவர்களைப்பார்க்கவில்லை.
தில் பாண்டியன், குருவி ரவி மனு ஒத்திவைப்பு:
இதற்கிடையே அப்புவின் கார் டிரைவர்-கம்-அடியாள் கதிரவன் மற்றும் இந்தக் கொலை வழக்கில் பொய்யாக சரணடைந்த தில்பாண்டியன், சதீஷ், அதற்கு உதவி செய்த குருவி ரவி, சுந்தரராமன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர்6ம் தேதிக்கு காஞ்சி நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications