நீதிமன்றங்களில் தமிழ்: ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் உயர் நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரை தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் பாமக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பிலும், தமிழ் பாதுகாப்பு இயக்கம்சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்குத் தலைமை வகித்த ராமதாஸ்,
மேற்கு வங்க மாநிலத்தில் உயர் நீதிமன்றம் முதல் கீழ் நீதிமன்றம் வரையில் வங்க மொழியில் தான் நடவடிக்கைகள் உள்ளன.அதேபோல பல வட இந்திய மாநிலங்களில் இந்தியில் தான் கோர்ட் நடவடிக்கைகள் உள்ளன.
ஆனால் தமிழகத்தில் தான் உயர் நீதிமன்றம் முதல் கீழ் நீதிமன்றம் வரை தமிழ் ஆட்சி மொழியாக இல்லை. எனவே அனைத்துநீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.
இப் போராட்டத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் சேதுராமனும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications