கேரள சாமியாருடன் தப்பியோடிய குறிஞ்சி சாமியார்!!
சென்னை:
உஷாவை சங்கராச்சாரியாருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகக் கூறப்படும் குறிஞ்சி சாமியார் திடீரென தலைமறைவாகியுள்ளார்.
சென்னை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் ஒரு பெரிய பங்களாவில் ஆசிரமம் நடத்தி வந்தவர் இந்த குறிஞ்சி சாமியார்.பங்களாவின் வெளியே குடில்கள் போன்ற செட்-அப்பை அமைத்து, ஆட்களை அங்கு தங்கிச் செல்ல வைத்துள்ளார்.
மன அமைதி வேண்டி வருவோர், இந்த எளிய குடில்களில் தங்கி மனச் சாந்தி பெற்றுவிட்டுப் போவார்கள் என்று இந்த சாமியார் மீதுநம்பிக்கை வைத்திருப்பவர்கள் சொல்கின்றனர்.
இவரைத் தேடி அதிகமான பெண்கள் வந்து போவதுண்டு என்றும், அடிக்கடி வந்து போனவர்களில் உஷாவும் ஒருவர் என்கிறார்கள். இவர்தான் உஷாவை சங்கராச்சாரியாருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இவரை விசாரிக்கச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி. அந்த பங்களாவைப் பூட்டிவிட்டு சாமியார் எஸ்கேப் ஆகிவிட்டார்.இவர் குறித்து போலீசார் விசாரித்தபோது, நெற்குன்றத்தில் ஒரு கேரளச சாமியாரின் வீட்டில் அவர் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கேரள சாமியாரின் வீட்டை போலீசார் தேடிச் சென்றனர். ஆனால், அந்த வீடும் பூட்டப்பட்டிருந்தது. வீட்டுஉரிமையாளரின் உதவியுடன் வீட்டை போலீசார் திறந்து சோதனையிட்டபோது பெண்களின் உள்ளாடைகளும் காலி பீர் பாட்டில்களும்கிடந்தன.
சாமியார் தங்கியிருந்த தங்கள் வீட்டில் இந்த லெளகீக அயிட்டங்கள் இருந்தது கண்டு வீட்டுக்காரர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாமியார்களுக்கு எல்லாம் எதற்கு வீட்டை வாடகைக்கு விடுகிறீர்கள் என டோஸ் விட்ட போலீசார், வீட்டை சீல் வைத்துவிட்டுத் திரும்பிவந்துள்ளனர்.
கேளர சாமியாரும் குறிஞ்சி சாமியாரும் சேர்ந்தே தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. இவர்கள் இருவருக்கும் சேர்த்து இப்போது வலைவீசப்பட்டுள்ளது.
உஷாவைப் போலவே பல பேரை குறிஞ்சி சாமியார் பெரிய இடங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதாக போலீஸ் கருதுகிறது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications