அப்பு விவகாரம்: டிஜிபி கோவிந்த் கோபம்
சென்னை:
அப்பு கைது குறித்து ஊகச் செய்திகள் வெளியிடுவதற்கு தமிழக டிஜிபி கோவிந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான அப்பு மற்றும் ரவிசுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்துநிலவும் குழப்பம் குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் டிஜிபி கோவிந்த்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, இதெல்லாம் ஊகச் செய்திகள். யார் கைது செய்யப்பட்டிருந்தாலும் அதைகாவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். செய்திகளை வெளியிடும் முன்பு அதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம்விசாரிக்க வேண்டும் என்றார் கோபமாக.
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் கூடுதல் எஸ்.பி. சக்திவேலுவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, எனக்கும் குழப்பமாகத்தான்உள்ளது. இதுவரை எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
அப்பு குறித்து தொடர்ந்து குழப்பமான நிலையே காணப்படுகிறது.
போலீஸ் கஸ்டடியில் ரவிசுப்ரமணியம்?
இதற்கிடையே ஹரித்துவார் அருகே ரவிசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்வெளியாகியுள்ளன. தேவையான விஷயங்களை கறந்த பின்பே, ரவிசுப்ரமணியம் தமிழகம் கொண்டு வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.












Click it and Unblock the Notifications