டெல்லியில் புதிய தமிழகம் மாநாடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 3 நாள் தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கியது.
புதிய தமிழகம் கட்சியின் தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கியது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சூரஜ் பான், எம்.பிக்கள்ஆர்.எஸ்.கவாய், ஜி.வெங்கடசாமி, ராமதாஸ் அத்வாலே, டாக்டர் ஜெகன்னாத் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கடை நிலையில் உள்ள மக்கள் செழிப்பிற்கு எளிய மக்களின் சுய நிர்ணய உரிமை என்ற தலைப்பில் மாநாட்டில் கருத்தரங்கம்நடைபெறுகிறது. இரட்டை வாக்குரிமை, விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்டதலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications