உலக அழகியாக பெரு நாட்டு அழகி தேர்வு

Subscribe to Oneindia Tamil

சான்யா:

Maria Julia Mantilla Garcia2004-ம் ஆண்டின் உலக அழகியாக பெரு நாட்டைச் சேர்ந்த மரியா ஜூலியா மன்டில்லா கார்சியா (20) தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தென் சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 107 நாட்டு அழகிகள் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் அழகி சயாலி பகத் கலந்துகொண்டார்.

முதல் தடவையாக இந்த முறை அழகிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் தொலைபேசி, இணையதளம், எஸ்.எம்.எஸ்.வழியாக உலக அழகியைத் தேர்ந்தெடுத்தனர்.

Maria Julia Mantilla Garciaஅவர்களின் தேர்வுப்படி 2004-ம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை பெரு நாட்டைச் சேர்ந்த மரியா ஜூலியா மன்டில்லா கார்சியா தட்டிச்சென்றார்.

டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த கிளாடியா ஜூலிசா கிரஸ் ரோட்ரிக்ஸ் (18) 2-வது இடத்தையும், அமெரிக்காவைச் சேர்ந்த நான்சிரண்டாலுக்கு (24) 3-வது இடத்தையும் பெற்றனர்.

உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட கார்சியாவுக்கு ரூ.45 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதுதவிர மேலும் பல பரிசுகளும்வழங்கப்பட்டன.

உயர்நிலை பள்ளிக்கூட ஆசிரியை ஆகவேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறிய கார்சியா, அறக்கட்டளை ஒன்றை அமைத்துஉதவிகள் செய்யப் போவதாகவும் கூறினார்.

அடுத்த ஆண்டு உலக அழகிப் போட்டியும் சீனாவிலேயே நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+