மடாதிபதிகளை கடவுள் காப்பாற்றுவார்: விசாகை பீடாதிபதி
காஞ்சிபுரம்:
மடாதிபதிகளையும், மடங்களையும் கடவுள் காப்பாற்றுவார் என்று விசாகப்பட்டினம் ஸ்ரீ விசாகை சாரதா பீடத்தைச் சேர்ந்தசொரூபானந்தேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் கூறினார்.
சங்கர மடத்துக்கு வந்த அவர், விஜயேந்திரருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களுடன்பேசுகையில் அவர் கூறியதாவது:
இந்தியாவில் மிகவும் பழமையான மடங்களுள் காஞ்சி மடமும் ஒன்று. இந்து மதத்தின் சாஸ்திர, சம்பிரதாய நெறிகளை பரப்புவதில்மடங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே பத்திரிக்கைகள் தங்களுக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து செய்திகளை வெளியிடவேண்டும்.
இப் பிரச்சினைக்கு நீதிமன்றத் தீர்வு ஏற்படும் வரை அவதூறு செய்திகளை வெளியிடுவதை செய்தி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்.
ஜெயேந்திரர் சிறைவாசம் அனுபவிப்பது அவரது பூர்வஜென்ம நன்மை, தீமைகளை அடிப்படையாகக் கொண்டது. இது விரைவில்விலகும்.
கடவுள் இருக்கிறார். அவர் மடத்தையும், மடாதிபதிகளையும் காப்பாற்றுவார் என்றார்.












Click it and Unblock the Notifications