மாணவியிடம் செக்ஸ் குறும்பு: தலைமை ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் ஓன் படிக்கும் மாணவியிடம் பாலியல் குறும்பில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோடம்பாக்கம், புலியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் செபாஸ்டியன்சாமுவேல். இவர் பிளஸ் ஓன் படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் குறும்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
மாணவ, மாணவியர் பள்ளி வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.பள்ளி பொருட்கள் சில சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர் சாமுவேல் கைதுசெய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications