நீதிமன்றத்தில் அனுராதா ரமணன் ரகசிய வாக்குமூலம்
உத்திரமேரூர்:
எழுத்தாளர் அனுராதா ரமணன் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சங்கராச்சாரியாருக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
சங்கராச்சாரியார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ள அனுராதா ரமணனிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து இன்று காலை போலீஸ் வேனில் 2 பெண் காவலர்கள் துணையுடன் அவர் உத்தரமேரூர் கொண்டு வரப்பட்டார்.
அப்போது அவரைப் படமெடுக்க பத்திரிக்கையாளர்கள் முயல, புத்தகத்தால் முகத்தை மூடியபடி ஏன் படம் பிடிக்கிறீங்க என்று கோபமாகக்கேட்டார்.
டிவியிலும் பத்திரிக்கைகளுக்கும் பக்கம் பக்கமாக பேட்டி கொடுத்தீர்களே... இப்போது படம் பிடித்தால் ஏன் தடுக்கிறீர்கள் என்று பதிலுக்குநிருபர்கள் எகிற அங்கு டென்சன் கூடியது.
இந் நிலையில் அவரை விறுவிறுவென நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்றனர் போலீசார். அங்கு நீதிபதி ராமஜெயம் முன் 164வதுபிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் தந்தார் அனுராதா ரமணன். அப்போது நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், போலீசார் எனஅனைவரும் வெளியேற்றப்பட்டு நீதிமன்ற ஹாலின் கதவுகள் மூடப்பட்டன.
நீதிபதியிடம் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குமூலம் தந்துவிட்டுத் திரும்பினார் அனுராதா ரமணன்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications