வழக்கை: வேறு மாநிலத்துக்கு மாற்ற பாஜக போராட்டம்
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி வரும் 13ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவுசெய்துள்ளது.
தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மேலிடப்பொறுப்பாளரான பண்டாரு தத்தாத்ரேயா தலைமை வகித்தார்.
அதன் தேசிய செயலாளர் இல.கணேசன், மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான திருநாவுக்கரசர்,பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் வழக்கை காவல்துறை விசாரிக்கும் விதம் சரியில்லை.விசாரணை அதிகாரி பிரேம்குமார் மீது கடுமையான புகார்கள் உள்ளன.
இதனால் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதே சரியாக இருக்கும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 13ம் தேதி தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்
ஜெயேந்திரர் பலவீனம்: சகோதரர் கவலை
இதற்கிடையே ஜெயேந்திரர் மிகவும் பலவீனமாக காணப்படுவதாக அவரை வேலூர் மத்திய சிறையில் சந்தித்த அவரது சகோதரர்விஸ்வநாதன் கூறியுள்ளார்.
ஜெயேந்திரன் சகோதரர் விஸ்வநாத அய்யர், அவரது மருமகன் சுந்தர் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்குச் சென்று ஜெயேந்திரரைபார்த்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயேந்திரர் முன்பு மாதிரி இல்லை. மிகவும் பலவீனமாகக் காணப்படுகிறார், எப்போதும் சோர்வாகவே இருப்பதாக தெரிவித்தார்.
அவரது உடல் நிலையில் என்ன பிரச்சினை என்பதை டாக்டர்கள் தெளிவாக்க வேண்டும். அவர் விரைவில் வெளிவர வேண்டும். அதுதான்எங்களது ஒரே பிரார்த்தனை என்றார்.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் வருகை:
இதற்கிடையே சிறையில் சங்கராச்சாரியாரை சந்திக்க பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர்வேலூர் சிறைக்கு வரத் திட்டமிட்டுள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications