திமுக கூட்டணியை கண்டு ஜெவுக்கு பயம்: பாஜக
மதுரை:
அரசியல்ரீதியில் மக்களின் ஆதரவை இழந்துவிட்டதாலும் திமுக கூட்டணியின் வலிமையைக் கண்டு பயந்து போனதாலும், மக்களின்கவனத்தை திசை திருப்புவதற்காக சங்கராச்சாரியாரைக் கைது செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டதாக பா.ஜ.கவின் தமிழக பொறுப்பாளரானபண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ள முதல் பா.ஜ.க. தலைவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அத்வானியில்ஆரம்பித்து இல.கணேசன் வரை சுற்றி வளைத்து சோனியாவையே தாக்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்திய பின் மதுரை சென்ற பண்டாரு தத்தாத்ரேயாஅங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் பா.ஜ.க. இனிமேல் தனித்தே போட்டியிடும். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் எந்தத் தவறும்இல்லை. அது ஒரு அரசியல்ரீதியிலான அவசியமாகிவிட்ட கூட்டணி. ஆனால், இனிமேல் கட்சியை அனைத்து கிராமங்களுக்கும்கொண்டு செல்வோம். மக்களிடம் கட்சியை வலுப்படுத்துவோம்.
இருந்தாலும் அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பனோ கிடையாது. இந்துத்துவாவையும் அயோத்தியையும் விட்டுத் தரவே மாட்டோம்.
அனைத்து மட்டத்திலும் ஜெயலலிதாவின் ஆதரவு சரிந்து போய்விட்டது. மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய அவரதுஅரசின் தோல்வியே காரணம். அரசின் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்ப ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஒரு விஷயம்தேவைப்பட்டது.
இதனால் தான் சங்கராச்சாரியாரைக் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.
திமுக கூட்டணியின் வலிமை அதிகரித்து வருகிறது. இதைக் கண்டு ஜெயலலிதா பெரும் கவலையடைந்திருக்கிறார். மாநிலத்தில் எந்தவளர்ச்சிப் பணியையும் ஜெயலலிதாவால் செய்யவில்லை, செய்யவும் முடியவில்லை.
இதனால் ஜெயேந்திரரைக் கைது செய்து திசை திருப்பல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதன்மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனதைபுண்படுத்திவிட்டார் ஜெயலலிதா.
இப்போது இந்த வழக்கை மாநில அரசு நடத்தி வரும் முறையைப் பார்த்தால், அதன் நோக்கமே வேறு என்பது தெளிவாகப் புரிகிறது. இந்தவழக்கு முக்கியத்துவம் இழக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த கேஸ் கோர்ட்டில் நிற்காது என்பது தெரிந்துவிட்டதால் முடிந்தவரை ஜெயேந்திரரர் மற்றும் மடத்தின் பெயரைக் கெடுப்பது என்றமுடிவுக்கு வந்துவிட்ட ஜெயலலிதா, இப்போது அந்த வேலைகளைத் தான் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தக் கைது விஷயத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பாராமுகமாக இருப்பது, மைனாரிட்டிகளின் ஓட்டை மனதில் வைத்துத் தான்.மற்ற மதத்தைச் சேர்ந்த மூத்த தலைவரை கைது செய்தால் இவர்கள் ஒரு அமைதியில் மூழ்குவார்களா என்று கேட்டார் பண்டாரு.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications