For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மீது இல.கணேசன் கடும் பாய்ச்சல்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் கொடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தர்மபுரியில் பேருந்து எரிப்பில் பலியான 3 மாணவிகள்குடும்பத்திற்கு ஏன் நிவாரண உதவி அளிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்துக்களில்இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஜெயலலிதா நிதி வழங்கியுள்ளார். ஆனால் அவர்களுக்கெல்லாம் அதிகபட்சமாக ரூ. 1லட்சம்வரைதான் வழங்கியுள்ளார்.

ஆனால், சங்கரராமன் கொலை செய்யப்பட்டு 2 மாதங்களுக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு ரூ. 5 லட்சத்தை வாரி வழங்கியுள்ளார்ஜெயலலிதா. இது எதன் வெளிப்பாடு?

சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறும் ஜெயலலிதா, தர்மபுரியில் அதிமுக தொண்டர்களால் 3 அப்பாவி மாணவிகள் பேருந்தில் வைத்துஉயிருடன் கொளுத்தப்பட்டபோது, அவர்களது குடும்பத்தினருக்கு எந்தவித நிதியுதவியையும் அளித்ததாக எனக்கு நினைவில்லை.

ஜெயேந்திரர் விவகாரத்தில் ஜெயலலிதா பாரபட்சம் காட்டுகிறார். அவர் மீதான வழக்குகள் குறித்து சந்தேகம் வலுத்து வருகிறது.இவற்றிற்கு பதில் அளிக்க வேண்டியது ஜெயலலிதாவின் கடமை.

ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் தமிழகத்தில் மக்களிடம் எதிர்ப்பு இல்லை என்று நினைப்பது தவறு. அவரது கைதை முதலில் ஆதரித்ததிமுக தலைவர் கருணாநிதி பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். மூத்த அரசியல்வாதி அவர், மக்களின் நாடி நரம்புகளைபிடித்துப் பார்க்கத் தெரிந்தவர்.

அவரே தனகு கருத்தை மாற்றிக் கொண்டதன மூலம் ஜெயேந்திரர் கைதுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருப்பதை உணர முடியும்.

இந்த வழக்கையே வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி வரும் 13ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம் இந்தக் கைதுக்குக் காரணம்சங்கரராமன் கொலை இல்லை. வேறு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. இதை நீங்கள் (நிருபர்கள்) முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

உண்மை விஷயம் தெரிந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஜெயலலிதா. இன்னொருவர் சங்கராச்சாரியார்.

ஜெயேந்திரரைக் கைது செய்ததற்காக வருந்தியதாக ஜெயலலிதா கூறியதை யாரும் நம்பத் தயாராக இல்லை. மன வருத்தம் இருந்திருந்தால்அதை செயலில் காட்டியிருக்க வேண்டும்.

அதிமுகவும், திமுகவும் பா.ஜகவை தொடர்ந்து குறை கூறக் காரணம் எங்களது செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து வருவதை பொறுக்கமுடியாமல் தான்.

ஒன்று மட்டும் நிச்சயம் கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் நிச்சயம் சங்கராச்சாரியாரை கைது செய்திருக்க மாட்டார். இதை நான் மட்டும்சொல்லவில்லை. சங்கர மடத்தில் இருப்பவர்களும் கூட சொல்கிறார்கள் என்றார் இல.கணேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X