13 தமிழக மீனவர்கள் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர்பிடித்துச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்களை அடிக்கடித் தாக்கி அவர்களை சிறை பிடித்துச் செல்லும் இலங்கை கடற்படையினரின் போக்கு தொடர்ந்து நீடித்துவருகிறது. இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றுள்ளனர்.

ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 430 மீனவர்கள் விசைப் படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக் கடலில்அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் 3 படகுகளையும், அதில் இருந்த 13 மீனவர்களை மட்டும்பிடித்துக் கொண்டு மற்றவர்களை விரட்டி விட்டு விட்டனர்.

தப்பி வந்த மீனவர்கள் இதுகுறித்து ஜெகதாப்பட்டனம் காவல் நிலையத்திலும், மீன் வளத்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். 13மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற தகவல் ஜெகதாப்பட்டனம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்நடத்தியுள்ளனர். இதில், ஒரு படகு கடலில் மூழ்கியது.

15 மீனவர்கள் விடுதலை:

இந் நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கையின் மன்னார் மாவட்ட நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ராமேஸ்வரம் சிங்காரவேலர் மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த அக்டோபர் 4ம் தேதி முருகன், முருகராஜ், பக்கி ராவுத்தர், ராமமூர்த்தி, ராஜா, ராமநாதன் ஆகிய 6 பேர் இலங்கை கடற்படையினரால்சிறை பிடிக்கப்பட்டு அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் அக்டோபர் 7ம் தேதி 12 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இந் நிலையில் இவர்களில் 15 பேரையும், 6 படகுகளையும்விடுவிக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரைவில் இவர்கள் ராமேஸ்வரம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இலங்கை சிறையில் வாடும் மற்ற மீனவர்களையும்உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+