பெண் தொடர்புகளை விசாரித்தார்கள்: சொர்ணமால்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Swarnamalyaசங்கர மடத்தின் பெண் தொடர்புகள் குறித்து போலீஸார் தன்னிடம் விசாரித்ததாக நடிகை சொர்ணமால்யா கூறியுள்ளார். ஜெயேந்திரரைஎப்போதும் தனியே சந்தித்ததில்லை என்றும் அவர் கூறினார்.

சங்கர மடத்தில் வைத்துத் தான் சொர்ணமால்யாவுக்கும், அவரது கணவர் அர்ஜூனுக்கும் இடையே ரவி சுப்பிரமணியம் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாகவும், இறுதியில் அர்ஜூனை மிரட்டி பிரிந்து போகச் செய்ததாகவும், அதன் பின்னர் சங்கர மடத்துடன்சொர்ணமால்யா ரொம்பவே நெருங்கிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.

குறிப்பாக ரவி சுப்ரமணியத்திற்கும் சொர்ணமால்யாவுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும், வீடு, கார் வாங்கித் தரப்பட்டது குறித்தும்தகவல்கள் கிளம்பின.

இந் நிலையில் போலீசாரின் உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாரிடம் ஆஜரானார் சொர்ணமால்யா.சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

இந்த விசாரணை குறித்து சன் டிவிக்கு சொர்ணமால்யா அளித்துள்ள சிறப்புப் பேட்டி:

பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி வெளியான சில செய்திகளுக்கு என்னிடம் விளக்கம் கேட்கவே எஸ்.பி. பிரேம்குமார் என்னைஅழைத்திருந்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு எனது பதிலைச் சொன்னேன்.

விசாரணையின்போது நான் மட்டும்தான் இருந்தேன். என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அனைத்தையும் அவர்கள் கேட்டுவிட்டார்கள், நானும் உரிய விளக்கத்தை அளித்து விட்டேன்.

சங்கர மடத்திற்கும் சில பெண்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா என்று என்னிடம் கேட்டார்கள். அப்படிஎதையும் நான் கேள்விப்படவில்லை, எனக்கு அதுமாதியான அனுபவம் இல்லை என்று தெரிவித்தேன்.

எப்போதெல்லாம் சங்கர மடத்திற்கு வந்து போனீர்கள் என்றும் கேட்டார்கள். பல சந்தர்ப்பங்களில் எனது குடும்பத்துடன் நான் வந்துள்ளேன்என்று தெரிவித்தேன். எனது தாத்தா, அப்பா, அம்மா, சித்தி உள்பட எனது குடும்பத்தினருடன் சங்கர மடம் வந்துள்ளதாக அவர்களிடம்தெரிவித்தேன்.

நான் மட்டுமல், தமிழகத்தில் உள்ள பல குடும்பத்தினரும் சங்கர மடம் வந்து செல்வது வழக்கம் என்பதையும் அவர்களிடம் சொன்னேன்.மற்றபடி செய்தி ஊடகங்களில் வந்துள்ளது போல எதுவும் நடக்கவில்லை.

அதேபோல, வீடியோவைக் காட்டியோ, சிடியைப் போட்டுக் காட்டியோ விசாரணை எதுவும் நடைபெறவில்லை. விசாரணையின்போதுஎனது வழக்கறிஞரை உடனிருக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

எனது படங்களுக்கு சங்கர மடம் நிதியுதவி அளித்ததாக வரும் செய்திகளிலும் உண்மை இல்லை.

பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி வெளியான செய்திகள் அனைத்துமே தவறானவை. அவற்றில் சற்றும் உண்மையில்லை. என்னைப் பற்றிஏன் வதந்திகள் வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பற்றி அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுகுறித்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.

சங்கர மடத்துடன் நான்கைந்து நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணைக்கு என்னை மட்டும்கூப்பிட்டதன் காரணம் தெரியவில்லை. என்னிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கூப்பிட்டார்கள். அதனால் எனது விளக்கத்தைஅளித்தேன்.

எனது குடும்ப பின்னணி குறித்தும், அம்மா அப்பா குறித்தும் விசாரித்தனர் என்றார் சொர்ணமால்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+