தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகரிப்பு !
சென்னை:
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. தமிழக அரசு அமல்படுத்திய மழை நீர்சேகரிப்புத் திட்டமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் கடந்த அக்டோபர் 1ம் தேதியிலிருந்து நவம்பர் 17ம் தேதி வரையில் தமிழகம் மற்றும்புதுவையில் நிலத்தடி நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் இருப்பு வெகுவாக அதிகரித்துள்ளதுதெரியவந்துள்ளது. ஆனால் விருதுநகர், வேலூர், கோவை ஆகிய சில மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. தேனியில் நிலத்தடி நீர்இருப்பு அப்படியே இருந்தது. இந்த மாவட்டங்களில் பருவ மழை குறைவாக பெய்ததே காரணம்.
சென்னை, மதுரை, நீலகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி, கடலூர், விழுப்புரம்,திருநெல்வேலி, திருாவாரூர், நாகப்பட்டனம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் பருவ மழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்துள்ளது.
கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், கரூர், திருவள்ளூர்,வேலூர், விருதுநகர், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்வழக்கமான மழை இல்லை. தேனியில் வழக்கத்தை விட குறைவான மழையே பெய்துள்ளது.
மழை அளவு மாறுபட்டதாக இருந்தாலும் கூட கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 78 சதவீத கிணறுகளில் நீர் மட்டம்வெகுவாக உயர்ந்துள்ளது.
சென்னை மாநகரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 21 சதவீத மழை பெய்துள்ளது. புறநகர்ப் பகுதிகளில் உள்ளகிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் புறநகர்களில் அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் மழை நீர் சேகரிப்பு திட்டமே நிலத்தடி நீர் இருப்பின் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என நிலத்தடி நீர் வாரியம்தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
