உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு.. அதிலும் பிரச்சனை
டெல்லி:
சங்கராச்சாரியாரின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை அடுத்தவெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த ஜாமீன் மனு, சங்கர மடத்தின் ஒப்புதலே இல்லாமல் வேறு யாரோ ஒருவரால் விஷமத்தனமாக தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கிருஷ்ணமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கர மடத்தின் சார்பில் ஒரிஜினல் ஜாமீன் மனு வரும் திங்கள்கிழமை தான் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் கிருஷ்ணமணிதெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கோரியும் கிடைக்காத காரணத்தால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கிருஷ்ணமணி டெல்லி விரைந்தார்.
ஆனால், கிருஷ்ணமணி ஜாமீன் மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் சங்கராச்சாரியாருக்குஜாமீன் கோரி ஒரு ரிட் மனு தாக்கலானது. யோகேந்திர குமார் திவாரி என்பவரின் சார்பில் ஒரு வழக்கில் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர், நீதிபதி நோலேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்குவந்தது.
அப்போது ஆஜரான கிருஷ்ணமணி, ஜாமீன் மனு தாக்கல் செய்ய எனக்கு மட்டுமே சங்கராச்சாரியாரும் சங்கர மடமும் அனுமதி தந்துள்ளது.இந் நிலையில் யாரோ ஒருவர் விஷமயத்தனமாக இந்த ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு அவருக்கு யாரும் அனுமதிதரவில்லை. எனவே இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. நான் வரும் திங்கள்கிழமை ஜெயேந்திரருக்காக மனு செய்ய உள்ளேன்என்றார்.
அப்போது ரிட் மனு தாக்கல் செய்த யோகேந்திர திவாரியின் வழக்கறிஞரிடம் பேசிய தலைமை நீதிபதி, சங்கராச்சாரியாரின் அனுமதிஇல்லாமல் எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள் என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர், சங்கராச்சாரியாரின் அனுமதியை வரும் செவ்வாய்க்கிழமை வாங்கி வந்து சமர்பிக்கிறேன் என்றார்.
அப்போது சங்கர மடத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணமணி நீதிபதியிடம் ஒரு பைலைத் தந்தார். அதில் தனக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யவழக்கறிஞர் கிருஷ்ணமணிக்கும், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்பவருக்கும் அதிகாரம் தருகிறேன் என்று கூறி சங்கராச்சாரியார்கொடுக்க கடிதம் இருந்தது.
அந்தக் கடிதத்தில் சங்கராச்சாரியாரின் கையெழுத்துக்குப் பதிலாக, அவரது கைநாட்டு இருந்தது.
இதைப் பார்த்த தலைமை நீதிபதி, ஏன் சங்கராச்சாரியார் கையெழுத்து போடாமல் விரல் ரேகையை வைத்துள்ளார் என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கிருஷ்ணமணி, சங்கட மடத்தின் வழக்கப்படி சங்கராச்சாரியார்கள் கையெழுத்துப் போடும் வழக்கம் இல்லை.அதனால் தான் என்றார்.
இதையடுத்து இன்று யோகேந்திர திரிவேதி சார்பில் தாக்கலான ஜாமீன் மனு மீது அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை விசாரணை நடக்கும்என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications