திமுக கூட்டணி போராட்டம்: லட்சக்கணக்கில் பங்கேற்பு
சென்னை:
ஜெயேந்திரர் கைதை பாஜகவினர் அரசியலாக்க முயற்சிப்பதைக் கண்டித்து திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள்பங்கேற்றனர், விழுப்புரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜெயேந்திரர் கைது விவகாரத்துக்கு மதச் சாயம் பூசி அரசியலாக்க முயலும் பாஜக, விஎச்பி ஆகிய அமைப்புகளைக் கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் இன்று திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்ஆகிய கூட்டணிக் கட்சிகள் தவிர அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உள்பட 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடலூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் சுமார் 5,000 பேர் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு தலைமையில் போராட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய 1,000 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதே போல வேறு பல இடங்களிலும்ஆயிரக்கணக்கானவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications