இந்து நாளிதழ் வழக்கு 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றம்
டெல்லி:
இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது தமிழக சட்டசபை சபாநாயகர் பிறப்பித்த கைது வாரண்ட்டை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபையின் உரிமையை மீறி செய்தி வெளியிட்டதாகக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி சபாநாயகர் காளிமுத்து, இந்து ஆங்கிலநாளிதழின் ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர்கள், பதிப்பாளர், முரசொலி ஆசிரியர் ஆகியோரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து இந்து நாளிதழ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் கைது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்தது.
அப்போது சட்டசபையின் அதிகார வரம்புகள் குறித்து இந்து பல கேள்விகளை எழுப்பியது. இந்தக் கேள்விகள் அரசியல் சட்ட விவகாரம்சம்பந்தப்பட்டது என்பதால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த பெஞ்ச் முன் இப்போது இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்குவந்தது.
அப்போது இந்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, மனுதாரர்கள் மீதான நடவடிக்கையை தமிழக சட்டசபை வாபஸ் பெற்றுவிட்டது. இருப்பினும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்த கேள்வி இன்னும் அப்படியேதான் உள்ளது. எனவே இதுகுறித்து உச்ச நீதிமன்றம்தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாஹன்வதி கூறுகையில், இது மிகவும் முக்கியமான பிரச்சினை. இந்து மீதானநடவடிக்கை தற்போது கைவிடப்பட்டு விட்ட நிலையில் மேற்கொண்டு அதை நீதிமன்றம் தொடர்ந்து ஆராய வேண்டிய அவசியம் இல்லைஎன்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்தப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றம் சட்ட மசோதா எதையும் ஏன் இன்னும் கொண்டுவரவில்லை? என்று வினவினர்.
பின்னர் சால்வே வாதிடுகையில், பத்திரிக்கை சுதந்திரத்தைக் காக்க வேண்டியது மிக அவசியம். ஜனநாயகத்தின் நான்காவது தூணாககருதப்படும் பத்திரிக்கைகளின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதி லஹோத்தி குறுக்கிட்டு, பேச்சு சுதந்திரத்திற்கு உரிய இடம் உண்டெனில், அதே அளவிலான சுதந்திரம் எழுத்துக்கும்கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
பின்னர் இந்த வழக்கில் நுணுக்கமான அரசியல் சாசன விவகாரங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப் பசுகிறது. இதனால் இதை விரிவாகவேவிசாரிக்க வேண்டும். எனவே இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றுவதாக நீதிபதி லஹோத்தி அறிவித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications