ஜெயேந்திரர் உடல் நலம்: வதந்தி- பரபரப்பு
வேலூர்:
ஜெயேந்திரர் உடல் நலம் குறித்து வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் வதந்தி பரவியது. இதையடுத்து வதந்தியை நிறுத்தும் பொருட்டுஉயர் மட்ட மருத்துவர் குழு ஜெயேந்திரர் உடல் நிலையைப் பரிசோதனை செய்தது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மாரடைப்புஏற்பட்டுள்ளதாகவும் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் வதந்தி பரவியது.
இதையடுத்து வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பி.சண்கமும், துணை இயக்குனர் டாக்டர்புருஷோத்தம விஜயக்குமார், இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் திருமால் பாபு ஆகியோர் கொண்ட உயர் மட்ட மருத்துவக்குழு வேலூர் சிறைக்கு விரைந்தது.
ஜெயேந்திரரை அவர்கள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரப் பரிசோதனைக்குப் பின் 3 பேரும்வெளியே வந்தனர்.
அவர்களை சூழ்ந்த செய்தியாளர்களிடம், ஜெயேந்திரர் நலமுடன்தான் உள்ளார். அவரைப் பற்றிய வதந்தியில் உண்மை ஏதும்இல்லை என்றனர்.
அவர்கள் சென்ற பின்னர் சிறிது நேரத்தில், ஜெயேந்திரரின் உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக சங்கர மட டாக்டர்ராமச்சந்திரன் வந்தார். ஜெயேந்திரரை பார்த்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டுச் சென்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications