ஜெ. சொத்து குவிப்பு: அடுத்த மாதம் விசாரணை
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் அடுத்த மாதம் தொடங்கும் என்று சிறப்புநீதிமன்ற நீதிபதி பச்சேபுரா கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்த வழக்கு சரிவர விசாரிக்கப்படாததாலும், விசாரணையில் அரசு தலையிட்டதாலும் இதனை பெங்களூருக்குமாற்றியது உச்ச நீதிமன்றம்.
சுமார் 8,000 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கு ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றன. இந்தப் பணியில் 20ம் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மொழியாக்கப் பணி அடுத்த மாதம் முடிவடையும் என்று தெரிகிறது. இதையடுத்து உடனடியாக விசாரணைதொடங்கப்படும் என நீதிபதி பச்சேபுரா கூறினார்.
விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைதினந்தோறும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் இந்த வழக்கு விசாரணைகளில் முதல்வர் ஜெயலலிதா தினமும் ஆஜராக வேண்டிய அவசியமும் ஏற்படலாம் என்றுதெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications