ராஜிவ் கொலையில் சந்திரா சாமிக்கு நேரடி தொடர்பு
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் சந்திரா சாமிக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு சந்திரா சாமி மீது நெடுங்காலத்துக்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் இந்தக் கோணத்தில் முழு விசாரணைஏதும் நடக்கவில்லை.
சந்திரா சாமி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வெளிநாட்டில் வாழும் தனது பக்தர்களை சந்தித்து சொற்பொழிவாற்றச் செல்ல அனுமதிக்க்க கோரி சந்திரா சாமிடெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சிபிஐ தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ராஜிவ் காந்தி கொலையில் அன்னிய சதி குறித்து பல்நோக்குக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளில்ராஜிவ் கொலைக்கு நிதியுதவி செய்தவர் சந்திரா சாமி என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த முழுமையாக விசாரணை நடந்து வருகிறது. இதில், இந்தக் கொலைக்காக புலிகளுக்கு சந்திரா சாமி நிதியுதவிசெய்துள்ளார். சந்திரா சாமியின் பண பரிமாற்றங்கள் குறித்து 23 நாடுகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால், 5 நாடுகள்மட்டுமே பதில் தந்துள்ளன.
இந்த விசாரணைகள் தொடர்வதால் சந்திரா சாமியை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிபிஐ கூறியுள்ளது.
ராஜிவ் கொலையில் சந்திரா சாமியை நேரடியாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications