சாமியார்கள் கைது: மனம் வெறுத்து தற்கொலை செய்த சென்னை சாமியார்
சென்னை:
எங்கு பார்த்தாலும் சாமியார்கள் கைது செய்யப்பட்டு வருவதால் மனம் வெறுத்துப் போன சென்னையைச் சேர்ந்த ஒரு சாமியார்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் சிவயோகி சிவனடியார் சுவாமி என்ற சாமியார் இருந்தார். அவருக்கு வயது 45. அந்தப்பகுதியில் இவர் ஒரு கோவிலை நிறுவி அங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
இந் நிலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்,தினசரி அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் சாமியார் எழுந்து விடுவார். ஆனால் நேற்று காலை 9 மணி ஆகியும், சாமியார் இருந்தஅறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து பால் போட வந்த பெண் எங்களிடம் கூறினார். அனைவரும் சேர்ந்து கதவைத் தட்டிப் பார்த்தோம். ஆனால் பதிலேவரவில்லை. இதையடுத்து போலீஸுக்குத தகவல் கொடுத்தோம்.
போலீஸார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தனது காவித் துண்டால் சாமியார் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார் என்றார்.
அய்யனார் என்பவர் கூறுகையில், இவர் மிகவும் நல்ல சாமியார். சமீப காலமாக ஜெயேந்திரர், சதுர்வேதி என பல சாமியார்கள்பல்வேறு புகார்களில் கைது செய்யப்பட்டு வருவதை வைத்து இப்பகுதியைச் சேர்ந்த சிலர் சிவனடியார் சுவாமியிடம் கேலிசெய்வர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த கேலி கிண்டலால் வெறுத்துப் போன அவர் தனது அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. பக்தர்களுக்கு மட்டும்ஆசி வழங்கி வந்தார். தினசரி அன்னதானம் செய்யும் பழக்கம் இவரிடம் உண்டு. பக்தர்கள் கொடுக்கும் பழம், டீ, பிஸ்கட்போன்றவற்றை மட்டுமே இவர் சாப்பிடுவார். அரிசி சாதம் கூட சாப்பிட மாட்டார் என்றார்.
சாமியார் குறித்து அப்பகுதி மக்கள் நல்ல கருத்தையே தெரிவிப்பதால், உள்ளூர் வாலிபர்கள் சிலரின் கேலியால்தான் சாமியார்தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று போலீஸார் கருதுகிறார்கள்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications