சுந்தரேச அய்யரும் விரைவில் கைது?
காஞ்சிபுரம்:
சங்கர மடத்தின் நிர்வாகியான சுந்தரேச அய்யரும் கைதில் இருந்து தப்பிக்க முடியாது என்றே தெரிகிறது.
மடத்துக்கு ஐசிஐசிஐ வங்கியில் கணக்கே இல்லை என்று புருடா விட்ட அய்யரிடம் மடத்தின் டிரஸ்ட் கணக்குகளைக் கொண்டு வந்துபோட்டு குடைந்து எடுத்துவிட்டது போலீஸ்.
இந்த டிரஸ்ட் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் குறித்தும், அந்தப் பணம் கொலையாளிகளுக்குப் போனது குறித்து அய்யரைநோண்டி எடுத்து வருகிறது போலீஸ்.
முதலில் முரண்டு பிடித்தார் அய்யர். ஆனால், தினமும் கார் அனுப்பி, 8 முறை எஸ்.பி அலுவலகத்துக்குக் கூப்பிட்டு விசாரித்த பிறகுஇப்போது தான் வாயைத் திறக்க ஆரம்பித்துள்ளார் அய்யர்.
போலீசார் அய்யரிடம் விசாரணை நடத்தும் விதமே அலாதி தான். அவரிடம் கேள்வி கேட்டால் பெரும்பாலும் பதில் வராது என்பதால்,ஆதாரங்களைத் தூக்கி அவர் முன் வைத்துவிட்டு, இது என்ன அய்யரே என்று கிடுக்கிப்பிடியைப் போட்டு அவரை திணறடித்துவருகின்றனர்.
8 முறை, ஒவவொரு முறையும் சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை நடத்தப்பட்ட விசாரணைகளால் நொந்து போய்விட்ட அய்யர்இப்போதெல்லாம் அதிகம் முரண்டு காட்டுவதில்லை என்கிறது போலீஸ்.
மடத்தின் பண விவகாரங்களை முழுக்க முழுக்க கவனித்தவர் என்ற வகையில் இவருக்குத் தெரியாமல் கொலையாளிக்குப் பணம்போயிருக்க வாய்ப்பே இல்லை என்று கூறும் போலீசார், அவரைக் கைது செய்யும் முடிவுக்கும் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications