அத்வானி, உமாவுக்கு வாசன் கடும் கண்டனம்
சென்னை:
சங்கராச்சாரியார் விஷயத்தில் அரசியலில் மதத்தைப் புகுந்தி ஆதாயம் தேட பாஜக முயல்வதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன்கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ். என்பது மதசார்பற்ற அமைப்பு என்று முன்னாள் பிரதமர் அத்வானி கூறியிருக்கிறார்.
பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா?. ஆர்.எஸ்.எஸ். என்பது மதவெறி பிடித்த நச்சு இயக்கம் என்பதை மறைக்க அத்வானிமுயல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் செயல் இல்லையா?
மகாத்மா காந்தியை கொலை செய்ததே ஆர்எஸ்எஸ்சைச் சேர்ந்த கோட்சே தானே. இதை அத்வானி மறுக்க முடியுமா?
அரசியலில் மதத்தைப் புகுந்தி ஆதாயம் தேட முயலும் பாஜகவின் தலைவரான அத்வானி, சங்கராச்சாரியார் விஷயத்திலும் இதேவேலையைச் செய்ய முயல்கிறார். ஆனால், இந்த முயற்சிகள் மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ளார் வாசன்.
இதே போல சங்கராச்சாரியாரை விடுதலை செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை உமா பாரதி வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.
உண்மைக்குப் புறம்பான பொய்களை புழுதி வாரி தூற்றுவது போல வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்.
சங்கராச்சாரியாரை நல்லபடியாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய கடிதம் கூட வெறும்கண்துடைப்பு என்கிறார். உமா பாரதியின் இந்தப் பேச்சுக்கள் அவரது அரசியல் அறியாமையைத் தான் காட்டுகின்றன.
இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications