உமாபாரதிக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி போன்றவர்களின் பொறுப்பற்ற பேச்சால் மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் போன்றஉயரிய தத்துவங்கள் மண் மேடிட்டுப் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், குஜராத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை இடித்தபோது அதுகுறித்து நாடாளுமன்றத்தில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சினை எழுப்பினார். ஆனால் இப்போது ஜெயேந்திரர் விஷயத்தில் அவர் மெளனம் சாதிப்பதுஏன் என்று கேட்டுள்ளார் உமாபாரதி.
வழிபாட்டுத் தலங்களான கோயிலோ, மசூதியோ, பேராலயமோ இடிக்கப்பட்டால் அதனால் மதச் சண்டைகள் மூளுமே என்ற ஆதங்கத்தில்சோனியா காந்தி அப்போது நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பினார்.
ஆனால் இப்போது சங்கர மடத்தை யாரும் இடித்து விடவில்லை. கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவேதான்சோனியா காந்தி பேசவில்லை.
உமாபாரதி போன்ற பொறுப்புணர்ச்சி இல்லாதவர்களின் பேச்சுக்களால் மதமாச்சரியம், சமூக நல்லிணக்கம் போன்ற உயரிய தத்துவங்கள்மண் மேடிட்டுப் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் என்னைக் கைது செய்தபோது, அதை தாங்கமுடியாமல் நான் அழுததாக உமா பாரதி கூறுகிறார்.இதுபோன்ற வேறுசில உன்மத்தர்களும் மேடையில் உளறிக் கொட்டியிருக்கிறார்கள். ஒரு காவலர் கையை முறிக்கும்போதும், மற்றொருவர்கழுத்தை நெறிக்கும்போதும் வலியில் துடிப்பது இயல்பு.
அதற்கு காரணம் உடலில் உணர்ச்சியிருப்பதுதான். உணர்ச்சியற்ற கட்டைகளாக இருந்தால் அது வேறு.
தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்று கூறினாலும் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள் என்று கூறினாலும் அவை இரண்டையும்ஒன்றாகக் கருதுபவன் தம்பி கருணாநிதி என்று அண்ணா கூறியது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அத்தகைய வரலாறுகளை உமா போன்றவாலறுந்த நரிகள் திரித்து எழுதி விட முடியாது.
ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். சிங்கக் குட்டி சிங்கத்திடம்தான் சிறப்பு பெற விரும்பும், சிறுநரிகளிடம் அல்ல.
ஆர்.எஸ்.எஸ். வன்முறை இயக்கம் அல்ல என்று அத்வானி ஒருபக்கம் கூறுகிறார். காந்தியடிகளின் உயிரைக் குடித்த 3 குண்டுகளைக்கேட்டால் உண்மை என்ன என்பது புரியும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications