போலீஸ் சித்திரவதை: ரகு புகார்
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 3 மணி நேரமும், சனிக்கிழமையில் 3 மணி நேரமும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம்திங்கள்கிழமைையும் (இன்று) விசாரணை நடத்தப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி தனிப்படை போலீஸார் முன்பு இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகிறார்.
ரகுவிடமான விசாரணை முழுவதும் வீடியோவிலும் பதிவு செய்யப்படுகிறது.
ரகு பேட்டி:
இதற்கிடையே விசாரணையின்போது போலீஸார் தன்னை மனதளவில் சித்ரவதைக்குள்ளாக்குவதாக ரகு குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
போலீஸாரின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். முதல் 10 நிமிடம் என்னிடம் நன்றாகவே பேசினார்கள். பின்னர்அவர்கள் என்னிடம் பேசும் விதமே மெல்ல மாறியது.
அக்கா, தங்கையைப் பற்றி பேசினால் கோபம் வருமல்லவா? அந்த முறையை என்னிடம் அவர்கள் கையாள்கிறார்கள்.
உடல் ரீதியாக துன்புறுத்துவதை விட மன ரீதியாக துன்புறுத்துவதுதான் என்னைக் கொல்வது போல உள்ளது. தனிப்படை போலீஸார்என்னை இந்த பொய் வழக்கில் சிக்க வைக்கக்கூடும்.
சங்கரராமன் கொலைக்கும் காஞ்சி மடத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஜெயேந்திரர் குறித்து கேட்டார்கள். இது தொடர்பாக எனக்கு தெரிந்ததை எல்லாம் போலீஸாரிடம் சொல்லி விட்டேன். ஆனால் எனக்குத்தெரியாததைக் கேட்டால் நான் எப்படி பதில் கூற முடியும்?
ஜெயேந்திர் கைது செய்யப்பட்டதற்கு நீதான் காரணம். உனக்கும் இதில் தொடர்பு உள்ளது. உன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றுபோலீஸார் கூறினர். இந்த வழக்கில் இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது பொய் வழக்கு போட்டாவது உன்னை கைது செய்வோம் என்றுமிரட்டினார்கள் என ரகு கூறினார்.
பல உண்மைகளை ரகு மறைக்க முயல்வதால் மிகக் காட்டமான முறையில் அவரிடம் போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவதற்கு முன்பிருந்தே போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் தான் ரகு இருந்து வருகிறார். அவர்யார், யாருடன் தொலைபேசியில் பேசினார், யாரைச் சந்தித்தார் என்பதெல்லாம் உளவுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் முடிவில் ரகு கைதாகப் போவது நிச்சயம் என்கிறது காவல்துறை வட்டாரம்.
சங்கர மடத்தின் மன்மத ராசா என்று தான் இவரை பலரும் குறிப்பிடுகின்றனர். மடத்தின் கார்களில் சொகுசாக ஊரைச் சுற்றுவது, மடத்தின்பணத்தில் விமானங்களில் பறப்பது, மடத்துப் பெயரைச் சொல்லி விஐபிக்களிடம் காரியம் சாதிப்பது, பெண் தொடர்புகள், ரெளடிகளுடன்தொடர்பு என ரகுவின் பெயர் காஞ்சிபுரதத்தில் ரொம்பத்தான் நாறிக் கிடக்கிறது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications