டி.எம்.எஸ்சுக்கு விழா எடுத்த மேடைப் பாடகர்கள்
சென்னை:
பழம் பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு சென்னையைச் சேர்ந்த பிரபல இசைக் குழுக்களின் பாடகர்கள் ஒன்று சேர்ந்துபாராட்டு விழா நடத்தினர்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் திரைக் குரலாக டி.எம்.செளந்தரராஜன் பல ஆண்டுகள் கோலோச்சியவர். வெண்கலக்குரலோன் என்று புகழப்பட்ட டி.எம்.எஸ்ஸுக்கு சென்னையில் உள்ள பல்வேறு இசைக் குழுக்களைச் சேர்ந்த மேடை மெல்லிசைப்பாடகர்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தினர்.
சாதகப் பறவைகள், உதயராகம், லஷ்மண்ஸ்ருதி உள்ளிட்ட பல்வேறு இசைக் குழுக்களைச் சேர்ந்த பாடகர்கள், பாடகியர்டி.எம்.செளந்தரராஜனையும், அவரது மனைவியையும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து ஊர்வலமாக தேனாம்பேட்டைகாமராஜர் அரங்கத்திற்கு அழைத்து வந்தனர். தேரின் சாரதியாக இசையமைப்பாளர் கணேஷ் ஓட்டி வந்தார்.
பின்னர் காமராஜர் அரங்கத்தில் நடந்த பாராட்டு விழாவில், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி,எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பாராட்டிப் பேசினர்.
அதன் பின்னர் டி.எம்.எஸ். பாடிய பிரபல பாடல்களை மேடை மெல்லிசைப் பாடகர்கள் பாடினர். தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்கு நன்றிதெரிவித்து இறுதியில் டி.எம்.எஸ். பேசினார். இது எனக்குக் கிடைத்த பாராட்டு அல்ல, காலம் கடந்தும் வாழும் எனது குரலுக்கும்,இசைக்கும் கிடைத்த பாராட்டு என்று பேசினார் டி.எம்.எஸ்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications