தலித்துக்கு நேர்ந்த கொடுமை
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம்பொள்ளாச்சி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய வேறு வகுப்பைச் சேர்ந்த 7பேரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ளது ஆவியூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு வகுப்பைச் சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவருக்கும் இடையே கடந்த வாரம்தகராறு ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட இருவருக்கு இடையே நடந்த மோதலை பஞ்சலிங்கம் சார்ந்த ஜாதியினர் ஊர்ப் பிரச்சனையாக்கினர்.
ஊர்ப் பஞ்சாயத்து கூடி ராமசாமிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி ஊரில் உள்ள கோவிலை 108 முறை ராமசாமி சுற்றிவர வேண்டும் என்று பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர்.
இதன்படி ராமசாமி கோவிலைச் சுற்றி வந்துள்ளார். ஆனால், இதன் பிறகு பஞ்சலிங்கம் சார்ந்த வகுப்பினர் ராமசாமியை கேலி பேசிஅவமானப்படுத்தியுள்ளனர். ஊரை விட்டே வெளியேற வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ராமசாமி கிராமத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்.
ஊரார் அவமானப்படுத்தியதால் நொந்து போன ராமசாமி மனமுடைந்த நிலையில் குடும்பத்தைவிட்டும் எங்கோ சென்றுவிட்டார்.
இதையடுத்து ராமசாமியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் பேரில் பஞ்சலிங்கம் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காணாமல் போய்விட்ட ராமசாமியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications