தினகரன்: மோசடி வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் சசிகலாவின் சகோதரருமான தினகரன் மீதான அன்னியச் செலவாணி மோசடி வழக்கு விசாரணைஅடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது.
இந் நிலையில் நீதிபதி சதாசிவம், நீதிபதி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வி.டி.கோபாலன் மற்றும் வில்சன் ஆகியோர், தினகரனுக்குவிதிக்கப்பட்ட அபராதம் நியாயமானது. எனவே அதை ரத்து செய்யக் கூடாது என்றனர்.
தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குமார் மற்றும் ஜீவசேனன், விரிவாக வாதாடுவதற்கு கால அவகாசம் கேட்டனர். இதையடுத்துவழக்கை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய நிதியமைச்சகத்தின் அனுமதியில்லாமல் வெளிநாடுகளில் தினகரன் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததையடுத்து இந்த அன்னியசெலாவணி மோசடி வழக்குப் பதிவானது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications