ஜெயேந்திரருடன் தே.ஜ.கூ. குழு சந்திப்பு
வேலூர்:
வேலூர் சிறையில் சங்கராச்சாரியாரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் சந்தித்துப் பேசினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 6 எம்.பிக்கள் குழு நேற்றிரவு சென்னை வந்தது. இக் குழுவுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமைவகிப்பார் என்று முதலில் பா.ஜ.க. அறிவித்தது. பின்னர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டது. இப்போது இந்தஇருவருக்கும் பதிலாக பல்பீர் புஞ்ச் எம்.பி. தலைமை தாங்கி வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கரமடத்தையும், ஜெயேந்திரரையும் ஒழித்துக் கட்டும்நோக்கில் இந்த பொய்யான வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. தமிழக அரசிடம் ஜெயேந்திரருக்கு நியாயம் கிடைக்காது. இந்தவழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். ஜெயேந்திரர் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும்.
ஜெயேந்திரரை சந்திக்க இதுவரை எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. முதலில் காஞ்சி மடம் செல்கிறோம். அங்கு விஜயேந்திரரைசந்திப்போம். அனுமதி கிடைத்தால் சங்கராச்சாரியாரைச் சந்தித்துப் பேசுவோம். இதன் பின்னர் எங்களது அறிக்கையை தலைமையிடம்சமர்பிப்போம் என்றார் புஞ்ச்.
இக் குழுவில் புஞ்ச் தவிர பாஜகவைச் சேர்ந்த ஜெயாபென் தாக்கூர், ராசா சிங் ரவாத், சிவசேனையைச் சேர்ந்த சந்திரகாந்த் கரே, மம்தாபானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த பாண்டா ஆகிய எம்.பிக்களும்இடம் பெற்றுள்ளனர்.
இந் நிலையில் இந்தக் குழுவினருக்கு இன்று காலை 8.45 மணிக்குத் தான் சங்கராச்சாரியாரைச் சந்திக்க அனுமதி தரப்பட்டது. இதையடுத்துஇக் குழுவினர் காஞ்சிபுரம் வழியாக வேலூர் புறப்பட்டுச் சென்றனர். காஞ்சிபுரத்தில் காலை 11 மணிக்கு விஜயேந்திரரை சந்தித்தினர்.
இச் சந்திப்பை முடித்த பிறகு வேலூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். 1 மணியளவில் ஜெயேந்திரரை சந்திக்க சிறைக்குள் சென்றுள்ளனர்.இவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் சென்றார். ஜெயேந்திரரை சந்தித்த பின்பு 1.45 மணிக்கு குழுவினர் வெளியேவந்தனர்.
குழுவின் தலைவர் பல்பீர் புஞ்ச் நிருபர்களிடம் பேசுகையில், ஜெயேந்திரர் உடல் ரீதியாக நன்றாக இருந்தாலும் மனதளவில்பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கையை நாங்கள் மேலிடத்தில் சமர்ப்பிப்போம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!










Click it and Unblock the Notifications