சச்சினை விட கவாஸ்கரே சிறந்த வீரர்: அக்ரம்
கொல்கத்தா:
சச்சினை விட காவஸ்கருக்கு பந்துவீசுவது சிரமமான வேலை என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமானவாசிம் அக்ரம் கூறினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது நிருபர்களிடம் அவர்பேசியதாவது:
டெண்டுல்கர், காவஸ்கர் இருவருமே என்னுடைய உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருவரும் சாதாரணமானஆட்டக்காரர்கள் அல்ல. இருப்பினும் சச்சினை விட காவஸ்கரை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு சுலபமில்லை.
காவஸ்கருக்கு பந்துவீசும்போது எனக்கு 20 வயது. அவரை ஒரே ஒரு முறை ஆட்டமிழக்க செய்துள்ளேன். அதை அவர் இன்றும் நினைவில்வைத்திருக்கிறார்.
1989 தொடருக்குப் பின் சச்சினுக்கு பந்துவீசும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் காவஸ்கரின் உலக சாதனையைமுறியடிக்கும் திறன் அவரிடமே உள்ளது.
அதை நான் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரது சாதனைகளே அதை சொல்லும் என்றார் அக்ரம்.
வங்கதேசத்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கரின் சாதனையை (அதிக சதங்கள்) டெண்டுல்கர் சமன் செய்தார்.அதனையடுத்து கவாஸ்கர் அளித்த பேட்டியில், கிடைப்பதற்கரிய கோஹினூர் வைரம் போன்றவர் சச்சின் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications