அப்பு, ரவி குறித்து தகவல் தந்தால் ரூ. 1 லட்சம் பரிசு!
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கூலிப்படைத் தலைவன் அப்பு மற்றும் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் பற்றி தகவல்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில்விசாரணைக்கு வரவுள்ள நிலையில் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் இன்று காலைஅவசரமாக டெல்லி சென்றனர்.
அரசுத் தரப்பு வாதங்களை பலப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை வழக்கறிஞர்களுக்குத் தருவதற்காகவபிரேம்குமார் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அப்பு, ரவி சுப்பிரமணியம் ஆகியோரை ஆந்திரா, பெங்களூர், டெல்லி உள்படபல மாநிலங்களில் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இருப்பினும் அவர்கள் தலைமறைவாக இருக்கும் இடத்தை போலீஸாரால்கண்டுபிடிக்க முடியவில்லை. இந் நிலையில் டெல்லியில் பிரேம்குமார் நிருபர்களிடம் பேசுகையில்,
அப்பு, ரவி சுப்பிரமணியத்தை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் பதுங்கி இருக்கும் இடம் பற்றி பொது மக்கள்தகவல் கொடுத்தால் ரூ. 1 லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும்.
காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகம், கண்ட்ரோல் ரூம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். தகவல்கொடுப்பவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்றார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications