இலங்கை: நிதியளிக்கும் நாடுகள் ஜேவிபிக்கு கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைக் சீர்குலைக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சி முயற்சிக்கிறது எனஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு புலிகள் விதித்த சில நிபந்தனைகளை ஜே.வி.பி. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்தக் கட்சியின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள அதிபர் சந்திரிகாவும் அந்தக் கட்சியின் நிபந்தனைகளுக்கு தலையாட்டிவருகிறார்.
இந் நிலையில் அமைதி முயற்சியைக் குலைக்கும் ஜே.வி.பியின் செயல்களை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான அரசுகண்டுகொள்ளாமல் இருப்பதாக இலங்கை புனரமைப்புக்கு நிதியளிக்கும் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண சந்திரிகா குமாரதுங்கா விரும்பினால் ஜேவிபி கட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று இந்த நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன.
இலங்கையில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் பக்கமிருக்கும் நியாயத்தை சர்வதேச நாடுகள் உணர்ந்துள்ளன என்று மாவீரர் தினத்தன்று புலிகளின்தலைவர் பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications