ராணி மேரி கல்லூரி வழக்கு: ஸ்டாலின் ஆஜர்
சென்னை:
சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவியர் போராட்டத்தின்போது அத்துமீறி கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததாக தொடரப்பட்டவழக்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை கடற்கரையில் உள்ள ராணி மேரிக் கல்லூரியை இடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது அதைத் தடுப்பதற்காக கல்லூரிமாணவியர் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.
அப்போது மாணவியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஸ்டாலின் உள்ளிட்டோர் கல்லூரிக்குள் நுழைந்துமாணவிகளிடம் பேசினர். இதையடுத்து போலீஸ் உத்தரவை மீறி அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்ததாக ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்ட13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
மேலும் இதுதொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்டோர் கைதும் செய்யப்பட்டனர். கைது செய்ய சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல்தடுத்ததாகவும் ஸ்டாலின் மீது இன்னொரு வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்குகள் சென்னை சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இன்று இவ்வழக்கு விசாரணைக்குவந்தபோது ஸ்டாலின் உள்ளிட்ட 11பேர் ஆஜராகினர். இருப்பினும், வழக்கு தொடர்புடைய 2 பேர் ஆஜராகவில்லையாதலால், வழக்குவிசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications