கருணாநிதி ராஜினாமா செய்யட்டும்: காளிமுத்து
நாகர்கோவில்:
சட்டசபைக்கே வராமல் தவிர்த்து வரும் திமுக தலைவர் கருணாநிதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்வது நல்லது என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த காளிமுத்து அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபைக் கூட்டம்பொங்கலுக்குப் பின்னர் கூடவுள்ளது. ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டம் தொடங்கும்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 4 ஆண்டுகளாக சட்டசபைக்கு வராமல் உள்ளார். இதுதொடர்பானகேள்விகளுக்கு நான் பலமுறை பதிலளித்து விட்டேன். ஏன் வர மாட்டேன் என்கிறார் என்பதை அவரிடம்தான்கேட்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சபைக்கு வராமல் இருக்கக் கூடாது. சபைக்கு வந்து ஜனநாயகக் கடைமையைஆற்ற வேண்டும். அப்படி முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு ஒருவரை சபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் போதிய அளவு பேச அனுமதிக்கப்படுகிறது. சபையில் உள்ளஉறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில்தான் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அது தற்போதுகடைப்பிடிக்கப்படுவதில்லை. அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான அளவில் நேரம் ஒதுக்கப்படுகிறது.
நான் எப்போது அமைச்சர் ஆவேன் என்பது எனது கையில் இல்லை. அது முதலமைச்சரின் உரிமை. அவர்தான்அதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் நிதி நிலை சீரான பிறகு எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும்என்றார் அவர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications