சிறை வாசலில் திடீர் பூஜை நடத்திய புரோகிதர்!
வேலூர்:
சங்கராச்சாரியார் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று வேண்டி புரோகிதர் ஒருவர் வேலூர் சிறை வாசலில் பாராயணமும் பூஜையும்நடத்தினார்.
சங்கராச்சாரியாரை சிறையில் சந்திக்க தென்னிந்திய புரோகிதர்கள் நலச் சங்க நிர்வாகிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இச் சங்கத்தின் செயலாளர் ஆரணி நரசிம்மன் தனியே வந்து ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி கோரினார். அதற்கும் போலீஸ்அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த தேங்காய், பூ, பழத்தை சிறை வாசலில் வைத்து திடீர் பூஜையை ஆரம்பித்தார்நரசிம்மன். பின்னர் 3 முறை நெடுஞ்சானாக விழுந்து கும்பிட்டார்.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றை பாராயணம் செய்தார் நரசிம்மன்.
இதைப் பார்த்து கையைப் பிசைந்தபடி நின்றிருந்தனர் போலீசார். தனது பாராயணத்தை முடித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய நரசிம்மன்,சீதைக்கு எப்படி ராமன் இருக்கும் இடம் அயோத்தியோ. அதுபோல ஜெயேந்திரர் இருக்கும் இடமே எனக்குக் கோவில் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications