வெள்ளம்: மத்திய குழு ஆய்வு
சென்னை:
மத்திய அரசு அனுப்பியுள்ள 6 பேர் கொண்ட வெள்ள நிவாரண ஆய்வுக் குழுவினர் இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர்மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழையின்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால்விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக வேளாண்துறை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து முதல்வர் ஜெயலலிதாவுக்குஅறிக்கை கொடுத்தார். அவரது ஆய்வின் அடிப்படையில் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 410 கோடி வழங்க வேண்டும் என்று மத்தியஅரசிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் மத்திய நிபுணர் குழு இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.உள்துறை இணைச் செயலாளர் மிஸ்ரா தலைமையிலான ஒரு குழு இன்று காலை நாகப்பட்டனம் சென்றது.
அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரசண்முகமணியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் நாகை, திருவாரூர்,தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை குழுவினர் பார்வையிட புறப்பட்டுச் சென்றனர்.
சைதன்யமூர்த்தி தலைமையிலான மற்றொரு குழு கடலூர் மாவட்டம் சென்றது. அங்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி,மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப்சிங் பேடி ஆகியோருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளான சில இடங்களை குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications