பிரேம்குமாரை நீக்க ஆளுநடரிம் பாஜக கோரிக்கை
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கை விசாரித்து வரும் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமாரை விசாரணை அதிகாரி பொறுப்பிலிருந்து மாற்ற உத்தரவிடக்கோரி பாஜக வழக்கறிஞர் பிரிவு ஆளுநர் பர்னாலாவிடம் மனு கொடுத்துள்ளது.
பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் துணைத் தலைவர் குமரகுரு ஆகியோர் பர்னாலாவைச் சந்தித்து மனுஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், ஜெயேந்திரர் உள்ளிட்டோரிடம் நடந்து வரும் விசாரணை குறித்த தகவல்களை பிரேம்குமார் சில குறிப்பிட்டபத்திரிகைகளுக்கு ரகசியமாக கொடுத்து வருகிறார்.
நீதிபதி முன்பு பூட்டப்பட்ட அறையில், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164வது பிரிவின் கீழ் சாட்சிகள், குற்றவாளிகள் ஆகியோர்கொடுக்கும் ரகசிய வாக்குமூலங்கள் கூட சில பத்திரிக்கைகளில் வெளியாகின்றன.
விசாரைணயின்போது போலீஸ் தரப்பில் எடுக்கப்படும் வீடியோ படங்கள் கூட சில பத்திரிக்கைகளில் புகைப்படங்களாகவெளியாகியுள்ளன. பிரேம்குமார் விசாரணையில் எந்தவித நியாயம், நேர்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் அவர். எனவே அவரைவிசாரணை அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
வேறு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு











Click it and Unblock the Notifications