விருதுநகரை கலக்கும் மஞ்சள் சேலை சென்டிமெண்ட்!!
விருதுநகர்:
சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை எடுத்துக் கொடுத்தால் வளம் கொழிக்கும் என்ற செய்தி பரவியதால் விருதுநகர் மாவட்டம் முழுவதும்சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை எடுத்துக் கொடுக்கும் வேலையில் சகோதரர்கள் படு பிசியாக இறங்கியுள்ளனர்.
தாரண ஆண்டில் ஏதாவது ஒரு வண்ணத்தில் தங்களது சகோதரிகளுக்கு சேலை கொடுப்பது வழக்கமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புபச்சை நிறத்தில் சேலை எடுத்துக் கொடுத்தால் சகோதரர்களின் வாழ்வில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பரவியது.
தமிழ்நாடு முழுவதும் பரவிய இந்த சென்டிமெண்டால் பச்சை சேலை விற்பனை கன ஜோராக நடந்தது.
இந் நிலையில் இப்போது மஞ்சள் சேலை எடுத்துக் கொடுத்தால் சகோதரர்களின் வாழ்வில் வளம் கொழிக்கும் என்ற தகவல் பரவியுள்ளது.இதையடுத்து தற்போது மாவட்டம் முழுவதும் மஞ்சள் சேலைகளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மஞ்சள் சேலை மட்டுமல்லாது, மஞ்சள் வளையல், மஞ்சள் கயிறு என மஞ்சள் நிறமுள்ள அனைத்து பொருட்களும் படு வேகமாகவிற்பனையாகி வருகின்றன. கடைகளின் முன்பு இங்கு அனைத்து வித மஞ்சள் நிற பொருட்களும் கிடைக்கும் என்று திடீர் போர்டுகளையும்காண முடிகிறது.
விருதுநகர், ராஜபாளையம், கோவில்பட்டி, சாத்தூர் என அக்கம் பக்கத்தில் உள்ள பல ஊர்களிலும் இந்த மஞ்சள் நிற பொருட்களின்விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
மெதுவாக இந்த சென்டிமெண்ட் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications