21 பேர் உள்ளே; ரவிசுப்ரமணியம் மட்டும் வெளியே !
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை ஜெயேந்திரர் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம்மட்டும் இன்னும் பிடிபடாமல் உள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் தங்களது கைது வேட்டையை நவம்பர் 6ம் தேதி தொடங்கினர். அன்றைய தினம் பழனி, ரவிஉள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதன் பின்னர் நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் குமார், ஆனந்த், செந்தில்குமார், ஆறுமுகம், கதிரவன், ரஜினி என்ற சின்னாஉள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நவம்பர் 11ம் தேதி (தீபாவளி இரவன்று) ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 17ம் தேதி அம்பி என்ற அம்பிகாபதி கைது செய்யப்பட்டார். டிசம்பர் 2ம் தேதி சதீஷ், ஆறுமுகம், பாண்டியன், சில்வஸ்டார், மாட்டுபாஸ்கர் உள்ளிட்ட 8 பேர் வளைக்கப்பட்டனர்.
டிசம்பர் 19ம் தேதியான நேற்று அப்பு பிடிபட்டான்.
அப்புவோடு சேர்த்து இதுவரை 21 பேர் கைதாகியுள்ளனர். இன்னும் காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் மட்டும் தலைமறைவாக உள்ளார்.அவரும் விரைவில் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸில் விசாரித்த வக்கீல்!:
இதற்கிடையே தலைமறைவாக உள்ள ரவி சுப்ரமணியத்தை போலீஸார் கைது செய்து விட்டனரா என்று அவரது வழக்கறிஞர் காஞ்சிபுரம்போலீஸாரிடம் வந்து விசாரித்து விட்டுச் சென்றுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு நேற்று போலீஸிடம் பிடிபட்டார். இந் நிலையில் நேற்று ரவிசுப்ரமணியத்தின் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் காஞ்சிபுரம் எஸ்.பியின் காட்டுப் பங்களாவுக்கு வந்தார்.
அங்குள்ள போலீஸாரிடம் பேசிய அவர் வெளியே வந்தார். அவடரிம் செய்தியாளர்கள் ரவி சுப்ரமணியம் குறித்துக் கேட்டபோது,ரவிசுப்ரமணியத்தை கைது செய்து விட்டீர்களா என்று விசாரிக்கத்தான் வந்தேன் என்று கூறி விட்டு சென்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications