அப்புவை வளைத்தது எப்படி?: விறுவிறு தகவல்கள்!
சென்னை:
சரண் அடைவதாக கூறி மூன்று முறை போலீஸாரை டெல்லி, சித்தூருக்கு வரவழைத்து அப்பு ஏமாற்றியுள்ளான்.
கூலிப் படைத் தலைவன் அப்பு இந்த முறை போலீஸாரால் பிடிக்கப்பட்டுள்ளான். இருப்பினும் இதற்கு முன் மூன்று முறை போலீஸாரைவரவழைத்து விட்டு சரணடைவதாக கூறி அவன் ஏமாற்றியுள்ளான்.
எஸ்.பி. பிரேம்குமாருடன் அப்பு பலமுறை செல்போனிலும் பேசியுள்ளான். இன்டர்நெட் தொலைபேசி மூலம் பிரேம்குமாரின்செல்போனைத் தொடர்பு கொண்ட அப்பு, ஜெர்மனி, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பேசுவது போல பேசியுள்ளான்.
ஆனால், இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர்களின் உதவியுடன் போலீசார் விசாரித்தபோது அந்த தொலைபேசி அழைப்புகள் புனே மற்றும்ஆந்திராவில் இருந்து வந்தது உறுதியானது.
இதை வெளியில் காட்டிக் கொள்ளாத பிரேம்குமார், நீ இந்தியாவுக்கு திரும்பி வந்து சரணடைந்துவிடு, உன் உயிருக்கு நான் உத்தரவாதம்தருகிறேன் என்று கூறி வந்துள்ளார்.
அதே நேரத்தில் அப்பு பயன்படுத்திய இன்டர்நெட் தொலைபேசியின் ஐடியை (ஐபி அட்ரஸ்) வைத்து அந்த இடங்களில் எல்லாம் தமிழகபோலீஸ் படை ரெய்ட் நடத்தி வந்துள்ளது. ஆனால், அப்பு சிக்கவில்லை.
இந் நிலையில், தான் இந்தியா திரும்பிவிட்டதாகவும் டெல்லியில் வைத்து சரணடைவதாகவும் அப்பு கூற சிறப்பு விமானத்தில் புறப்பட்டுச்சென்றது தமிழக போலீஸ் படை. சொன்னபடி அப்பு சரணடையவில்லை.
இதைத் தொடர்ந்து என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை களத்தில் இறக்கப்பட்டார். போலீசாரின் இந்த சைக்கலாஜிகல் மிரட்டல்பெரும் உதவி செய்தது. உயிர் பயம் அதிகரித்துப் போன அப்பு மீண்டும் பிரேம்குமாரைத் தொடர்பு கொண்டு ஆந்திராவில் வைத்துசரணடைவதாக கூறியுள்ளான்.
இதை நம்பி 2 முறை தமிழக போலீஸ் படை ஆந்திராவுக்குச் சென்றது. ஆனால் 2 முறையும் அப்பு வராமல் ஏமாற்றி விட்டான். கடைசிநிமிடத்திதில் தனது முடிவை அப்பு மாற்றிக் கொண்டு விட்டான்.
இந்த முறையும் அப்புவிடமிருந்து சரண் குறித்த தகவல் வந்தது. ஆனால் இந்த முறை எப்படியும் அப்புவை விடக் கூடாது என்று தீர்மானித்தபோலீஸ் குழு, அப்புவின் பேச்சை நம்பாதது போலவும், நீ சரணடைய மாட்டாய், நாங்கள் வரப் போவதில்லை என்று கூறி நடித்தவாரேஅவனுக்கு பொறி வைத்துப் பிடித்துவிட்டது.
இந்த வேட்டைக்கு உதவியாக இருந்தது அப்புவின் மைத்துனர்களான செங்கல்வராயலு, ராமச்சந்திர ரெட்டி ஆகியோர்.
அப்பு பிடிபடாவிட்டால் உங்களைக் கைது செய்வதைத் தவிர வேறு இல்லை என போலீசார் செங்கல்வராயலு, ராமச்சந்திர ரெட்டிஆகியோரை மிரட்டியதாகவும், பதிலுக்கு அவர்கள் அப்பு உயிருக்கு உத்தரவாதம் கேட்டதாகவும், அதை பிரேம்குமார் தந்ததால் கைதுசெய்ய அவர்கள் உதவியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலீசிடம் சரணடைய வைக்க அப்புவை அவனது மைத்துனர்கள் மனரீதியில் தயார்படுத்திவிட்டு பிரேம்குமாருக்குத் தகவல்தந்துள்ளனர். ஆனாலும் கடைசி நேரத்தில் அவன் தப்பியோட முயற்சிக்கவே துப்பாக்கி முனையில் தான் போலீசாரிடம் சிக்கினான்என்கிறது காவல்துறை.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications