அப்புவுக்கு மேலும் 6 நாள் போலீஸ் காவல்
காஞ்சிபுரம்:
கூலிப் படைத் தலைவன் அப்புவின் போலீஸ் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு ஆந்திர மாநலத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டான். அவனை காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் 3 நாள்போலீஸ் காவலில் எடுத்தனர்.
காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவில் வைத்து கடந்த 3 நாட்களும் அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.இன்றுடன் இந்தப் போலீஸ் காவல் முடிவடைந்ததால் அவனை மீண்டும் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்ற நீதிபதிஉத்தமராஜன் முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது போலீஸ் தரப்பில் விசாரணை அதிகாரியான கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில் அப்புவிடம் மேலும் விசாரணை நடத்தவேண்டியுள்ளதால். போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்றுகோரினார்.
இதற்கு அப்புவின் வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் அப்புவின் போலீஸ் காவலை மேலும்6 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து மீண்டும் அப்பு காட்டு பங்களாவுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
ஜாமீன் மனு எப்போது?:
இதற்கிடையே அப்புவுக்கு ஜாமீன் கோருவது தொடர்பாக நிதானித்து, பொறுமையுடன் முடிவு செய்யப் போவதாகஅவரது வழக்கறிஞர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
ஜாமீன் கோருவது தொடர்பாக நிதானித்து முடிவெடுக்கப்படும். அவசரம் காட்ட மாட்டோம், பொறுமையுடன்செயல்படத் தீர்மானித்துள்ளோம். அப்புவை நேரில் சந்தித்து விவாதித்த பின்னர் ஜாமீன் மனு தாக்கல் செய்வதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றார்.
வங்கி அதிகாரிகளிடம் விசாரணை:
இதற்கிடையே, காஞ்சி மடத்தின் கணக்குள் உள்ள காஞ்சிபுரம் பஞ்சாப் தேசிய வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கிகளின் கிளை மேலாளர்களிடம்போலீஸார் இன்று விசாரணை நடத்தினார்கள்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications