நாளை ஜெயேந்திரரின் சிறைக் காவல் நீடிப்பு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரரின் சிறைக் காவல் நாளையுடன்முடிவடைவதால் காஞ்சிபுரம் மற்றும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் அவரது காவல் வீடியோ கான்பரன்சிங் மூலமேநீட்டிக்கப்படும் என தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறைக் காவல் நாளையுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து இரு நீதிமன்றங்களிலும் அவர் நாளைஆஜர்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும் கடந்த முறையைப் போலவே இம் முறையும் வீடியோ கான்பரன்சிங் மூலமே ஜெயேந்திரரின் சிறைக் காவல் நீட்டிக்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவி நாளை ஆஜர்?:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ரவி சுப்ரமணியம் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதால் நாளை அவரை காஞ்சிபுரம்நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இநத்ப் பரபரப்பான சூழ்நிலையில் ஜெயேந்திரரை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதை போலீஸார் தவிர்க்க நினைக்கிறார்கள்.இதனால் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெயேந்திரன் காவல் நீட்டிக்கப்படலாம்.
கதிரவன் சிறைக் காவல் நீட்டிப்பு
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள கதிரவன் உள்ளிட்ட 4 பேரின் காவல் ஜனவரி 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்புவின் கூலிப் படையைச் சேர்ந்த கதிரவன், ரஜினி என்ற சின்னா, அனில், அம்பி என்ற அம்பிகாபதி ஆகியோர்கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து 4 பேரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது அவர்களது காவலை ஜனவரி 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications