ராகிங்: பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர், மூத்த மாணவர்களின் ராகிங் கொடுமை தாங்க முடியாமல்தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அருகே உள்ளது எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த மோகன் கார்த்திக் என்ற 19வயது மாணவர் முதலாமாண்டு படித்து வந்தார்.
மோகன் கார்த்திக்கை, 3வது ஆண்டு படிக்கும் மாணவர்களான பார்கவ் குமார், வேனு மாதவ ரெட்டி ஆகிய இரண்டு பேரும் ராகிங்செய்துள்ளனர். மோகன் கார்த்திக்கின் அறைக்கு வந்த அவர்கள், ஒரு வாளியில் மோகன் கார்த்திக்கை சிறுநீர் கழிக்கச் சொல்லியுள்ளனர்.பின்னர் அதை தலையில் ஊற்றிக் குளிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
அதிர்ச்சியிலும், அவமானத்திலும் கூனிக் குறுகிய மோகன் கார்த்திக், இந்த சம்பவம் குறித்து ஆந்திராவில் உள்ள தனது பெற்றோருக்குபோன் செய்து கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகிகளுக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் மாலை கல்லூரியில் விடுதியில் உள்ள தனது அறைக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் மோகன்கார்த்திக். இதைத் தொடர்ந்து கார்த்திக்கின் பெற்றோர் பூந்தமல்லி விரைந்து வந்தனர். மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
கார்த்திக் தற்கொலை செய்து கொள்ள கல்லூரி நிர்வாகமே காரணம். ராகிங் குறித்து புகார் தெரிவித்தும் கல்லூரி நிர்வாகம் உரியநடவடிக்கையை எடுக்கவில்லை என பூந்தமல்லி போலீஸில் கார்த்திக்கின் தந்தை புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாக இயக்குநர் கே.ராமதாஸ் மற்றும் மாணவர் பார்கவ் குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். கல்லூரி முதல்வரும், மற்றொரு மாணவரான வேணுகோபால ரெட்டியும் தலைமறைவாகிவிட்டனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications