எங்க மாமா நல்லவர்!
சித்தூர்:
எங்கள் மாமா அப்பு மிகவும் நல்லவர், அவரை போலீஸார் கொலை வழக்கில் சிக்க வைக்கத் துடிப்பது ஏன் என்று புரியவில்லை எனஅப்புவின் அக்காள் பத்மாவின் மகள் நீரஜா கூறியுள்ளார்.
அப்புவின் சொந்த ஊர் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம். இங்குதான் அவரது அக்காள் பத்மா வசித்துவருகிறார். அவரது மகள் நீரஜா, எம்.சி.ஏ பயின்று வரும் மாணவி. தனது தாய்மாமா அப்பு குறித்து நீரஜா கூறியதாவது:
எனது தாய் மாமா அப்பு மிகவும் நல்லவர். அவரது குடும்பத்தினரும் மிகவும் நல்லவர்கள். எங்களது மாமாவுக்கு 2 மகன்கள் உள்ளனர்.ஒருவர் அமெரிக்காவில் உள்ளார், இன்னொருவர் சென்னையில் மாமாவுடன் தங்கியுள்ளார்.
மாமாவின் குடும்பம் மிகவும் உணர்ச்சிவயப்படக் கூடிய தன்மையுடையவர்கள். தப்பு செய்தால் அவர்களுக்குப் பிடிக்காது. மாமா அடிக்கடிஇங்கு வருவார், வரும்போது அத்தையும் (அப்புவின் மனைவி) உடன் வருவார்.
மாமாவுக்கு இங்கு அதிகம் தங்கப் பிடிக்காது. காடு போல இருக்கும் இந்த இடத்தில் நான் தங்க மாட்டேன் என்று கூறி விட்டு வந்தவேகத்தில் சென்று விடுவார். மேலும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படும் என்பதால் அவருக்கு இங்கு இருக்கவே பிடிக்காது.
மாமாவுக்கு இந்த கொலை வழக்கில் சம்பந்தமே இருக்காது. ஆனால் போலீஸார் ஏன்தான் அவரை இதில் மாட்டி விடத் துடிக்கிறார்கள்என்பது புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் மாமாவின் மூத்த மகனுக்கு நான்தான் போன் செய்து தகவலைக் கூறினேன். அவருக்குஷாக் ஆகி விட்டது.
வழக்கலிருந்து மாமா விடுபட வேண்டும் என்று அவரது குடும்பதிதனர் கோயில் கோயிலாக சென்று வருகின்றனர். போலீஸில்சரணடைவதற்கு முன்பு எங்கள் வீட்டில் மாமா சாப்பிட்டார். அதன் பிறகு ராகு காலம் கழிந்த பிறகு மாமாவை அழைத்துச் செல்லுமாறுபோலீஸைக் கேட்டுக் கொண்டோம். அவர்களும் காத்திருந்து அழைத்துச் சென்றனர்.
மாமாவுக்கு ஒன்றும் ஆகாது என்று எனது அம்மாவிடம் எஸ்.பி. பிரேம்குமார் உறுதி அளித்தார். அதன் பிறகே மாமாவை அழைத்துச் செல்லஅம்மா அனுமதித்தார் என்றார் நீரஜா.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications