ஓடும் பஸ்ஸில் கொலை
காஞ்சிபுரம்:
அச்சரப்பாக்கம் அருகே உள்ள தின்னலூர் காலனி அதிமுக பிரமுகர் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தின்னலூர் பகுதி அதிமுக கிளைச் செயலாளராக இருந்தவர் ஏழுமலை (58). இவரது மகள் தீபாவை (18) அதே ஊரைச் சேர்ந்த வேதகிரிஎன்பவரின் மகன் விநாயகம் திருமணம் செய்ய விரும்பினார்.
வேதகிரி திமுக உறுப்பினர் என்பதால் அதற்கு ஏழுமலை சம்மதிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இந் நிலையில் தீபா, சுந்தரம் செட்டியார் என்பரின் மகன் விஜயனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது வேதகிரி தரப்புக்குகோபத்தை அதிகப்படுத்தியது. இதற்கிடையே ஏழுமலைக்கும் வேதகிரிக்கும் ஒரு நிலம் வாங்குவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
இந் நிலையில் ஏழுமலையும் அவரது மருமகன் விஜயனும் திண்டிவனத்தில் இருந்து தின்னலூர் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறினார்கள்.தின்னலூர் அருகே சென்னேரி கூட்டு ரோடு பகுதியில் பேருந்து வந்தபோது வேதகிரியும் அவருடன் வந்த 5 பேரும் வழிமறித்தனர்.
பேருந்தில் ஏறி ஏழுமலையை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். ஏழுமலையை காப்பாற்ற முயன்ற விஜயனுக்கும் அரிவாள் வெட்டுவிழுந்தது. பின்னர் அக் கும்பல் தப்பிச் சென்றது.
படுகாயத்துடன் விஜயன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
அச்சரப்பாக்கம் போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேதகிரி, அவரது மகன் விநாயகம், காளி,முருகன் ஆகிய 4 பேரை போலீஸார் பிடித்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications