வீரப்பன்: மிர்ஜி வாக்குமூலம்
தருமபுரி:
வீரப்பன் கொலை குறித்து விசாரிக்கும் தருமபுரி கோட்டாட்சியர் பிரகாசத்திடம் கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதிபிரகாஷ் மிர்ஜிஇன்று வாக்குமூலம் அளித்தார்.
கடந்த அக்டோபர் 18ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டி சாலையில் செல்லியம்பட்டி தொழுநோய் மறுவாழ்வு இல்லம் அருகேவீரப்பனையும் அவனது கூட்டாளிகளும் தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவம் குறித்து விசாரிக்குமாறு தருமபுரி கோட்டாட்சியர் பிரகாசத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 1ம்தேதி முதல் அவர் விசாரித்து வருகிறார்.
முதலில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, உறவினர்கள், பொதுமக்களிடம் விசாரணை நடத்திய அவர் நவம்பர் 25-ம் தேதி முதல் அதிரடிப்படையினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழக அதிரடிப் படைத் தலைவர் விஜயகுமார், செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் அவரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக அதிரடிப் படைத் தலைவர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி, துணை காவல்துறை கண்காணிப்பாளர் திம்மையா உட்பட 4 பேர்இன்று வாக்குமூலம் அளித்தனர்.
அடுத்து வீரப்பன் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் சேலம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மருத்துவர் வள்ளிவிநாயகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர்ஆர்.டி.ஓ. முன்பு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications