சென்னையில் அப்புவிடம் தொடர் விசாரணை
சென்னை:
கூலிப்படைத் தலைவன் அப்புவை காஞ்சிபுரம் போலீஸார் சென்னைக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அப்பு தற்போது 6 நாள் போலீஸ் காவலில் உள்ளான். அவனிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக அப்புவை போலீஸார் பலத்தபாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
எஸ்.பி. பிரேம்குமார், டிஎஸ்பி ராஜாமணி ஆகியோரும் அப்புவுடன் சென்னை வந்தனர். முதலில் சிஐடி நகரில்உள்ள அவனது வீட்டில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவன் போலி பாஸ்போர்ட் பெறஉதவியதாகக் கூறப்படும் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் உள்ள டிராவல் மாஸ்டர்ஸ் என்ற டிராவல்ஸ்நிறுவனத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்பு வெளிநாடு சென்று வர இந்த நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள், டாலர்-பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மேலும் சிலஇடங்களுக்கும் அப்புவை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்புவுக்குச் சொந்தமான இடங்களில் நடந்த இந்த விசாரணையின்போது பல்வேறு ஆவணங்களையும்போலீஸார் பறிமுதல் செய்தனர். அப்புவின் இன்னொரு பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், துப்பாக்கிஉரிமம் உள்ளிட்டவையும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் பின்னர் அப்புவை சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குக் கொண்டு சென்றனர். இந்தஹோட்டலின் உரிமையாளரான சக்கரவர்த்தி அப்புவுக்கு மிக நெருக்கமானவர். அந்த ஹோட்டலில் வைத்துத்தான் தனது கொலை, கடத்தல் திட்டங்களை அப்பு தீட்டுவான் என்கிறது போலீஸ்.
இந்த நட்சத்திர ஹோட்டலில் அப்புவுக்கு தனி அறை உள்ளது. இதனால் அந்த ஹோட்டலின்உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். உரிமையாளரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படவுள்ளார்.
ஹோட்டலில் விசாரணையை முடித்த போலீசார் அப்புவை நேற்றிரவு 11.30 மணிக்கு மகாகவி நகரில் உள்ளஅவனது தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அப்புவை ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பியது போலீஸ். இந்த வீடு அப்புவுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அப்பு சென்னையில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அண்ணாநகர் ரமேஷ் குடும்ப மரணத்தில் ஆரம்பித்து அப்பு சொத்து சேர்த்த விவரம், சங்கரராமன் கொலை வழக்குஆகிய எல்லா விவகாரங்கள் குறித்தும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரமேஷின் வீட்டுக்கும் அப்பு கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications