உலகெங்கும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்
வாட்டிகன்:
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாட்டிகன் நகரில் போப் இரண்டாம் ஜான் பால் உலகஅமைதிக்காக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார்.
வாட்டிகனில் புகழ் பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில் ஆல்ப்ஸ் மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட 32 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரம்நிறுவப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நின்று தீவிர சோதனைக்குப் பின் நள்ளிரவு பிரார்த்தனைக்குவாடிகன் தேவாலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நள்ளிரவில் போப் தனது ஜன்னல் வழியாக மக்கள் முன் எழுந்தருளினார். அவர் கையில் வைத்திருந்த மெழுகுவர்த்தியால் சிலுவைக்குறியிட்டார். மக்கள் ஆராவார கைதட்டல் எழுப்பினர்.
பின்பு போப் நடத்திய பிரார்த்தனையில் கர்த்தரே, பிரச்சனைகளிலும் சிக்கல்களிலும் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் உனதுதேவையை உணர்ந்துள்ளனர். எங்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க சொர்க்கத்தில் இருந்து வந்தவரே, எப்போதும் எங்களுடன் இருக்கவும்என்று வேண்டினார்.
கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீருடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் போப்பாண்டவருடன் இணைந்து வழிபட்டனர்.
இயேசு பிறந்த இடமான ஜெருசலேமில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஏராளமானவெளிநாட்டவர்களும், பாலஸ்தீனர்களும் ஜெருசலேமிற்கும் பெத்லஹேமிற்கும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியா முழுவதிலும் கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் நள்ளிரவு பிரார்த்தனையுடன்கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications